Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Featured Posts

This is default featured slide 1 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 2 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 3 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 4 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 5 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

Wednesday, October 16, 2013

பட்டினியில் இலங்கை 43வது இடம்

2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 வது இடத்திலுள்ளதுடன், தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா 2012ம் ஆண்டு உலக பட்டினிச் சுட்டியில் 67ம் இடத்திலிருந்து 2013ம் ஆண்டு 63ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  எனினும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 40 வீதமானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதேவேளை. சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே இந்தியா உள்ளது.
உலக பட்டினி சுட்டியில் சீனா, பட்டினி மட்டத்தில் 6 ம் இடத்தில் உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57வது, பங்களாதேஷ் 58 வது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன.
இதுவரை வெளியிடப்பட்ட பட்டினிச் சுட்டி அறிக்கையின்படி, 19 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் பதவி விலக ஒப்புக்கொண்டார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய பிக்குகள் முன்னணி, சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய பிக்குகள் முன்னணி இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் ஆனந்த தேரர், அதன் தேசிய அமைப்பாளர் உலப்பனை சுமங்கல தேரர் உள்ளிட்ட 12 தேரர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்ற முதலாவது யோசனை முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் ஐக்கிய பிக்குகள் முன்னணி, கட்சியின் வெற்றிக்காக பிக்குகள் முன்னணி தற்போது முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரணில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
அதி உயர் பீடமொன்றை அமைத்து அதன் மூலம் கட்சியை வழிநடத்துவதாக பௌத்த பிக்குகளிடம் ரணில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம், நிதித் திட்டமிடல் அமைச்சின் செய­லாளருக்கு அனுப்பி வைத்துள்ள திட்ட வரைபுக்கான ஆலோசனைகள் அடங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்­ளது.
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்­டுள்ளதாவது, எமது சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் 2014 ஆண்­டுக்கான திட்ட வரைவில் சேர்க்கப்படுமாயின் அது இந்த நாட்டினுடைய பெரும்­பான்மை அரச உத்தியோகத்தர்களான ஆசிரியர், அதிபர் ஆகியோருக்கு ஒரு வரப்பிரசாத­மாக அமையும்.
அந்த வகையில், பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள், தேசிய இடமாற்றக் கொள்­கைக்கு மாற்றமாக இடமாற்றம் பெற்றவர்கள் அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்தால் அம்முறையீட்­டினை இரண்டு வாரத்துக்குள் பரிசீலனை செய்து அல்லது குறிப்பிட்ட ஆசிரியரை விசாரணைக்கு உட்ப­டுத்தி அவ்விடமாற்றத்தினை உறுதி செய்தல்.
அதிபர் சேவை,ஆசிரியர் சேவை ஆகிய இரு சேவைகளையும் தரம் 1, 2, 3 ஆகிய தரங்க­ளாக தரப்படுத்துவதுடன்,
அதிபர், ஆசிரியர்கள் 25வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருந்தால் 9 வீதம் ஓய்வூ­தியம் வழங்குவதுடன் ஆசிரியர் சேவையில் ஆகக் குறைந்தது 10 வருட கால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் ஓய்வுநிலை பெறத் தகுதியுடையவராக கருதப்பட வேண்டும். ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையை ஏழாம் தரத்தில் நடாத்துவ­தற்கும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் தமிழ் மொழி பாடசாலை­களில் சிங்கள மொழியும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதோடு தரம் மூன்றிலி­ருந்து கற்பிக்கப்படுதல் வேண்டும். அப்பாடங்கள் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு ஒரு பாட­மாக பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு சாதாரண தர சித்தி கட்டாயப்படுத்தல் வேண்டும்.
வருடாந்த உயர்ச்சிப்படி ஆசிரியர் சேவை தரம் 3க்கு 300ரூபாவும், தரம் 2க்கு 600ரூபாவும், தரம் 1க்கு 900 ரூபாவாகவும் அமைவதுடன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீத சம்பளம் அதிகரிக்­கப்படல் வேண்டும்.
வரவு- செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படும் கொடுப்பனவில் அடிப்படைச் சம்பளத்தில் 50 வீதத்தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்தையும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
ஆசிரியர்களால் வழங்கப்படும் சிறிய தண்டனைகளை மாணவர் மத்தியில் மேற்கொள்வ­தற்காக தற்போதைய சட்டம் தடையாக அமைகிறது.
மேலும், எதிர்காலத்தில் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது கடினமாக அமைவதாகவும் தற்போதைய நடைமுறையினால் ஆசிரியர் மாணவர்களை தண்டிக்க முடியாத காரணத்­தினால் மாணவர் மத்தியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சீர்குலைவதுடன் எதிர்காலத்தில் ஒழுக்கக்கேடான சமுதாயத்தை உருவாக்குவதற்கு தற்போதுள்ள நடை­முறை வழிவகுப்பதனால் இந்நடைமுறையினை நிறுத்தி மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடியவர்களாக சட்டதிட்டங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் 2014ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்திற்காக நிதித்திட்டமிடல் அமைச்சுக்கு முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது

பெப்சி, கொக்கோகோலா பயன்படுத்த வேண்டாம்!- அமைச்சர் ஐங்கரநேசன் அதிரடி அறிவிப்பு


வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கோ கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் ஐங்கரநேசன்.
விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ "பெப்சி' மற்றும் கொக்கோகோலா' போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம்.
எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது.
இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன் நின்று கொள்ளும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 15, 2013

ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: பொதுபல சேனா எச்சரிக்கை

ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை.
எனவே ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 22ம் திகதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தின் எதிரிலிருந்து கண்டி சிறிதலாதா மாளிகை வரையில் பாத யாத்திரையொன்று நடத்தப்பட உள்ளது.
தலதா மாளிகையில் அதிஸ்டான பூஜையொன்று நடத்தப்பட உள்ளது.
ஹலால் சான்றிதழ் குறித்த பிரச்சினைக்கு எவரது மனதும் வலிக்காத வகையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதான்தெனியே ந்நத தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதனால் பௌத்த மக்களின் மனங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
ஹலால் பண்டங்கள் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரும் விகாராதிபதி

கல்முனைப் பிரதேச தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
கல்­முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூசையில் ஆன்மிக அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதன் மூலமே இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையை மேலோங்க வைக்க முடியும்.
இந்நாட்டில் வாழும் சகல பொது மக்களும் மனமகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பொலிஸார் இன, மத,குல வேறுபாடுகள் இன்றி சேவையாற்ற வேண்டும்.
இதுவரை காலமும் இப்தார் நிகழ்வு, வெசாக் நிகழ்வு என்பன இடம்பெற்ற இப்பொலிஸ் நிலையத்தில் மனிதகுலத்திற்கு சக்தி அளிக்கும் சரஸ்வதிக்கு பூசை முதல் தடவையாக இடம்பெறுவது சந்தோஷமான விடயம்.
இதனையிட்டு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபார், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், இதற்கு வித்திட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் ஆகியோரை சமயத் தலைவர் என்ற வகையில் பாராட்டுகின்றேன்.
சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும் வரும் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்ற நான் என்றும் தயாராகவுள்ளேன்.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் எனது உதவி, ஒத்தாசை நிச்சயம் இருக்கும். அதேபோன்று தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எமது விகாரைக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்.

Saturday, October 12, 2013

நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு செலவழிக்கும் பணத்தால் ஒரு இராச்சியத்தையே நடத்த முடியும்

இந்த நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு செலவழிக்கு பணத்தால் ஒரு இராச்சியத்தையே நடத்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பால்மா பக்கற் ஒன்றுக்கு 290/=   வரி அறவிடுவதிலிருந்து திருமண பதிவுக்கு 5000/=  கட்டணம் அறவிடுவது வரை இந்த அரசு வரி அறவிடுவதிலிருந்து உழைக்கும் பெரும் பணத்தொகையை இந்த பெரும் அமைச்சர் பட்டாளத்தை நடாத்தி செல்ல அரசு செலவழிக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (10 ஒக்டோபர்) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்; இக்கருத்துக்களை அநுர குமாரா தெரிவித்தார்.

உலகில் அதிக சனத்தொகையை கொண்ட நாடு 135 கோடி மக்களை கொண்ட சீனா. சீனாவில் அமைச்சர்கள் 27 பேர் மாத்திரமே. அடுத்த அதிகம் சனத்தொகையை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் சனத்தொகை 120 கோடி இந்தியாவில் அமைச்சர்மார்களின் தொகை 35. 14 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட ரசியாவில் 17 அமைச்சர்கள். அமெரிக்காவில் 24 அமைச்சர்கள். 22 கோடி மக்கள் சனத்தொகை. 12 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட ஜப்பானில் 19 அமைச்சர்கள். ஆனால் 2 கோடி மக்கள் சனத்தொகையை மட்டும கொண்ட இலங்கையில் கபினட் அமைச்சர்கள் 57 பேர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தவிர 29 பிரதி அமைச்சர்மார்கள். செயற்திட்ட அமைச்சர்கள் 2 பேர். இது தவிர 9 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போதாததற்கு 9 மாகாண முதலைமைச்சர்கள். மாகாண அமைச்சர்கள் 36 பேர். இப்படி அமைச்;சர்கள் பட்டாளமொன்றையே அரசு நடாத்தி சொல்வதன் நோக்கம் என்ன?
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சென்ற காலங்களில் மாதத்துக்கு 121,000/=  ரூபா மின்சாரகட்டணம் செலுத்தினார். 5000 மின்விளக்குகள் கொண்டு வெசாக் தோரணம் செய்து அதனை ஒரு வாரம் காலம் தொடர்ந்து ஒளிர விட்டாலும் இவ்வளவு பெரிய தொகை மின்கட்டணமாக வராது. இரவு இரவாக கெஹெலிய ரம்புக்வல்ல ஏதாவது வெசாக் தோரணம் ஏதாவது செய்கிறாரோ தெரியில்லை என அநுர தெரிவித்தார்.
அமைச்சர்மார்களின் மின்கட்டணத்தை செலுத்துவது நாட்டு மக்கள். அமைச்சர் ஒருவருக்கு அரசு 2 வாகனங்களை கொடுக்கிறது. பேற்றோலுக்கு வருடத்துக்கு 150,000/=  கொடுக்கிறது. தொலைபேசி கட்டணங்களுக்காக 15,000/=  கொடுக்கிறது. ஆனால் அமைச்சர்மார்கள் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செலுத்துவது 1,000/=  மாத்திரமே மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவது 1,000/=  மாத்திரமே.
அமைச்சர் ஒவ்வொருவருக்கும் காரியாலய சேவைக்காக 15 பேரை வழங்குகின்றனர். இதில் 5 பேருக்கு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு 15,000/=  வீதம் பெற்றோலுக்காக வழங்கப்படுகிறது. 5 பேருக்கு தொலைபேசி கட்டணமாக 2,000/=  வீதம் வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக 6,500/=  விநோதங்கள் மற்றும் உபசரிப்புகளுக்காக அரசு வழங்குகிறது.
நாங்கள் நாட்டு மக்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இப்படியான அநியாயங்களை பண விரயத்தை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று தான். அழுது புலம்பும் அமைச்சர்களுக்கு பிள்ளைகள் பால் கேட்டு அழும்போது வாய்க்கு ஒரு சூப்பியை போடுவது போல் அமைச்சர் பதவி என்ற சூப்பியை வாயில் போட்டுவிடுவார்கள். நாட்டின் பணத்தில் 62 வீதத்தை பராமரிப்பது ராஜபக்ஷ குடும்பம். மீதி 38 வீதத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய அமைச்சர் பட்டாளம்? அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி தனக்குக் கீழ் வைத்துக் கொண்டுள்ளார்.
பிரதி அமைச்சருக்கும் அமைச்சருக்கு வழங்கும் அத்தனை வசதிகளும் வழங்கப்படும் என வர்த்தமாணியில் அறிவித்தார்கள். அமைச்சரின் கீழ் 5 வருடம் பணியாற்றினால் அந்த பணியாளுக்கு ஓய்வூதியும் கிடைக்கும்.
மங்கள அமைச்சராக இருக்கும் போது அமைச்சரவை பணியாளரில் ஒருவராக அநார்கலி இருந்தார். அந்த நேரத்தில் அநார்கலிக்கு 17 வயது இருக்கும். அநார்கலி 22 வயதுவரை சேவையாற்றி இருந்தால் அநார்கலியும் ஓய்வூதியம் பெறும் ஒரு பெண்ணாக இருந்திருப்பார். ஓய்வூதியம் பெரும் பெண் என்றவுடன் எம் மனதில் எப்படியான ஒரு உருவம் தோன்றும் என நினைத்துப் பாருங்கள்.
நாட்டுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை அமைச்சர்மார்கள் கூத்தடிப்பதற்காக வீணடிக்கின்றனர். அவர்கள் தங்களை மக்களின் பிரதிநிதி என்று அழைத்துக் கொண்டாலும் இவர்கள் கப்பம்காரர்கள். இவற்றை நாட்டுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுமக்கள் புரிந்து கொள்ளும் வரை நாம் இப்படியான தகவல்களை வெளியிட்டுக் கொண்டேயிருப்போம்.

Thursday, October 10, 2013

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மகளை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த தாய்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மகளை இரண்டு மணி நேரம் வீட்டில் உள்ள நாய்க் கூட்டில் அடைத்து வைத்த சம்பவம் ஒன்று கொழும்புக்கு அருகில் உள்ள கிரிபத்கொட என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது.
நாய் அடைத்து வைக்கப்படும் கூட்டில் அடைக்கப்பட்ட பிள்ளையின் தாய் தனியார் பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தான் கற்பிக்கும் பாடசாலையில் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு முகம் கொடுக்க முடியாத காரணத்தினால் அவர் தனது மகளுக்கு இப்படியான தண்டனையை வழங்கியுள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தான் குறைந்த புள்ளிகளை பெற்றதால் தனது தாய் தன்னை நாய் கூட்டில் அடைத்து வைத்ததாக மகள் தனது பாடசாலை நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அவரது நண்பர்கள் சம்பவம் பற்றி தமது வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தை அடுத்தே இந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

Tuesday, October 8, 2013

பொரலைத் தொகுதியில் சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன்: திலங்க சுமதிபால

கொழும்பு பொரலைத் தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்  வரை  அங்கு சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன். என பாராளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால தெரிவித்தார்.
நான் கல்வி பயிலும் காலத்தில் எனது தொகுதியில் 54 வீதமாக பௌத்தர்கள் இருந்தார்கள் ஆனால் தற்பொழுது 47 வீதமே உள்ளனர். தற்பொழுது நான் பொராளைத்தொகுதியில் உள்ள பௌத்த விகிதாசாரத்தை கட்டி பாதுகாத்து வருகின்றேன்.  இப் பிரதேசத்தில்   ஒரு போதும் முஸ்லீம்களை பெருக விடமாட்டேன். எனவும் அவர் தெரிவித்தார்.
உருகொடவத்தையில் ஸ்டுவார்ட் வீதி  சந்தியில்  உள்ள லேபர்  தொடர்மாடி 35 வீடுகள் உடைக்கப்படுவது சம்பந்தமாக  பண்சலைக்குள் வைத்து தேரர்களுடன் உரையாற்றும்போதே மேற்கண்ட தகவலை சூழ்ச்சியமாக தேரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க தெரிவித்தார்.
அமைச்சர் பௌசி அவரது இனத்திற்காக பேசுகின்றார். யாழ்ப்பாணத்தில் ரீ.என்.ஏ அவர்களது இனம் பற்றி பேசுகின்றபொழுது  எனக்கும்   எனது இனம் பற்றி பேசுவதற்கு உரிமையுண்டு என பாராளுமன்ற உறுப்பினர் மேலும்  தெரிவித்தார்;..
குறித்த இந்த வீடுகள் உடைக்கப்படுவதை தடுப்பது தொடர்பில் அல்லது அதற்கு வேறு மாற்று வழிகள் பற்றி கலந்துரையாடுவதற்கு அமைச்சர் பௌசியும் இங்கு  அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு வந்து மக்களுடன் உரையாற்றிச் சென்றார் .
பாதை அபிவிருத்திக்காக  ஊருகொடவத்தையில் உள்ள 36 தொடர்மாடி வீடுகள் உடைக்கப்படவுள்ளதால் அங்கு வாழ்ந்த 35 பௌத்த மக்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர்  பௌசியை நாடி இது சம்பந்தமாக ஒரு தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டிய நிலையில் . அமைச்சர் பௌசி இக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது .
 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text