Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 8, 2013

பொரலைத் தொகுதியில் சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன்: திலங்க சுமதிபால

கொழும்பு பொரலைத் தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்  வரை  அங்கு சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன். என பாராளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால தெரிவித்தார்.
நான் கல்வி பயிலும் காலத்தில் எனது தொகுதியில் 54 வீதமாக பௌத்தர்கள் இருந்தார்கள் ஆனால் தற்பொழுது 47 வீதமே உள்ளனர். தற்பொழுது நான் பொராளைத்தொகுதியில் உள்ள பௌத்த விகிதாசாரத்தை கட்டி பாதுகாத்து வருகின்றேன்.  இப் பிரதேசத்தில்   ஒரு போதும் முஸ்லீம்களை பெருக விடமாட்டேன். எனவும் அவர் தெரிவித்தார்.
உருகொடவத்தையில் ஸ்டுவார்ட் வீதி  சந்தியில்  உள்ள லேபர்  தொடர்மாடி 35 வீடுகள் உடைக்கப்படுவது சம்பந்தமாக  பண்சலைக்குள் வைத்து தேரர்களுடன் உரையாற்றும்போதே மேற்கண்ட தகவலை சூழ்ச்சியமாக தேரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க தெரிவித்தார்.
அமைச்சர் பௌசி அவரது இனத்திற்காக பேசுகின்றார். யாழ்ப்பாணத்தில் ரீ.என்.ஏ அவர்களது இனம் பற்றி பேசுகின்றபொழுது  எனக்கும்   எனது இனம் பற்றி பேசுவதற்கு உரிமையுண்டு என பாராளுமன்ற உறுப்பினர் மேலும்  தெரிவித்தார்;..
குறித்த இந்த வீடுகள் உடைக்கப்படுவதை தடுப்பது தொடர்பில் அல்லது அதற்கு வேறு மாற்று வழிகள் பற்றி கலந்துரையாடுவதற்கு அமைச்சர் பௌசியும் இங்கு  அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு வந்து மக்களுடன் உரையாற்றிச் சென்றார் .
பாதை அபிவிருத்திக்காக  ஊருகொடவத்தையில் உள்ள 36 தொடர்மாடி வீடுகள் உடைக்கப்படவுள்ளதால் அங்கு வாழ்ந்த 35 பௌத்த மக்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர்  பௌசியை நாடி இது சம்பந்தமாக ஒரு தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டிய நிலையில் . அமைச்சர் பௌசி இக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது .

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text