Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, June 3, 2013

கிழக்கு மாகாண சபையில் முறுகல் ! முதலமைச்சருடன் கேரளா செல்ல மறுத்த மாகாண அமைச்சா்கள்



கிழக்கு மாகாண முதலமைச்சரையும், மாகாண ஆளுனரையும் மாற்றுமாறு, கிழக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேர் வலியுறுத்தி வருவதாக 
தெரிவிக்கப்படுகிறது. 

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஆளுனரும் தங்களின் வேலைத்திட்டங்களை முறையாக அமுல் படுத்த இடையூறாக இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இதனால் அவர்களை மாற்றும் வரையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த கூடாது என்றும் அதுவரையில் மாகாணசபையின் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் குறித்த 20 உறுப்பினர்களும் எச்சரித்துள்ளனர். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் இந்தியாவின் கேரள மாநிலத்திற்கான விஜயத்தை மாகாண அமைச்சர்கள் நான்குபேர் பகிஷ்கரித்துள்ளனர். 

கேரள மாநில முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று இரவு அங்கு பயணமாகவிருந்தது. 

எதிர்வரும் 7ம் திகதிவரை கேரளாவில் தங்கி இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படிருந்தது. 

ஆனால் இந்த விஜயத்தினை கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.ஐ.எம்.மன்சூர், எம்,எஸ்.உதுமா லெப்பை, காபிஸ் நஸீர் அகமட் ஆகியோர் பகிஷ்கரித்துள்ளனர். 

தமது முடிவு குறித்து முதலமைச்சருக்கு எழுத்து மூலம் இவர்கள் அறிவித்துள்ளனர். 

முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆளுநரின் தலையீடுகளை கண்டித்துமே அமைச்சர்கள் நால்வரும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வாரம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சரவைக் கூட்டத்தையும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்திருந்தனர். 

இதன் தொடர்ச்சியாகவே கேரள மாநிலத்திற்கான விஜயத்திலும் நான்கு அமைச்‌சர்களும் பங்கேற்கவில்லையெனத் தெரிகின்றது.

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text