Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, October 16, 2013

வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம், நிதித் திட்டமிடல் அமைச்சின் செய­லாளருக்கு அனுப்பி வைத்துள்ள திட்ட வரைபுக்கான ஆலோசனைகள் அடங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்­ளது.
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்­டுள்ளதாவது, எமது சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் 2014 ஆண்­டுக்கான திட்ட வரைவில் சேர்க்கப்படுமாயின் அது இந்த நாட்டினுடைய பெரும்­பான்மை அரச உத்தியோகத்தர்களான ஆசிரியர், அதிபர் ஆகியோருக்கு ஒரு வரப்பிரசாத­மாக அமையும்.
அந்த வகையில், பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள், தேசிய இடமாற்றக் கொள்­கைக்கு மாற்றமாக இடமாற்றம் பெற்றவர்கள் அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்தால் அம்முறையீட்­டினை இரண்டு வாரத்துக்குள் பரிசீலனை செய்து அல்லது குறிப்பிட்ட ஆசிரியரை விசாரணைக்கு உட்ப­டுத்தி அவ்விடமாற்றத்தினை உறுதி செய்தல்.
அதிபர் சேவை,ஆசிரியர் சேவை ஆகிய இரு சேவைகளையும் தரம் 1, 2, 3 ஆகிய தரங்க­ளாக தரப்படுத்துவதுடன்,
அதிபர், ஆசிரியர்கள் 25வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருந்தால் 9 வீதம் ஓய்வூ­தியம் வழங்குவதுடன் ஆசிரியர் சேவையில் ஆகக் குறைந்தது 10 வருட கால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் ஓய்வுநிலை பெறத் தகுதியுடையவராக கருதப்பட வேண்டும். ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையை ஏழாம் தரத்தில் நடாத்துவ­தற்கும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் தமிழ் மொழி பாடசாலை­களில் சிங்கள மொழியும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதோடு தரம் மூன்றிலி­ருந்து கற்பிக்கப்படுதல் வேண்டும். அப்பாடங்கள் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு ஒரு பாட­மாக பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு சாதாரண தர சித்தி கட்டாயப்படுத்தல் வேண்டும்.
வருடாந்த உயர்ச்சிப்படி ஆசிரியர் சேவை தரம் 3க்கு 300ரூபாவும், தரம் 2க்கு 600ரூபாவும், தரம் 1க்கு 900 ரூபாவாகவும் அமைவதுடன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீத சம்பளம் அதிகரிக்­கப்படல் வேண்டும்.
வரவு- செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படும் கொடுப்பனவில் அடிப்படைச் சம்பளத்தில் 50 வீதத்தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்தையும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
ஆசிரியர்களால் வழங்கப்படும் சிறிய தண்டனைகளை மாணவர் மத்தியில் மேற்கொள்வ­தற்காக தற்போதைய சட்டம் தடையாக அமைகிறது.
மேலும், எதிர்காலத்தில் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது கடினமாக அமைவதாகவும் தற்போதைய நடைமுறையினால் ஆசிரியர் மாணவர்களை தண்டிக்க முடியாத காரணத்­தினால் மாணவர் மத்தியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சீர்குலைவதுடன் எதிர்காலத்தில் ஒழுக்கக்கேடான சமுதாயத்தை உருவாக்குவதற்கு தற்போதுள்ள நடை­முறை வழிவகுப்பதனால் இந்நடைமுறையினை நிறுத்தி மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடியவர்களாக சட்டதிட்டங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் 2014ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்திற்காக நிதித்திட்டமிடல் அமைச்சுக்கு முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text